சிறைகளில் கைதிகளுக்கான உணவு முறையில் மாற்றம்-திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பேட்டி

சிறைகளில் கைதிகளுக்கான உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. கூறினார்.

Update: 2023-07-28 18:52 GMT

திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி நேற்று புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''சிறையில் புத்தகங்கள் வாங்கி கைதிகளுக்கு கொடுக்கும் போது அவர்கள் அதனை படித்து திருந்துவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. திருச்சி சரகத்தில் இதுவரை 14,500 புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. திருச்சி சரகத்தில் சிறைவாசிகள் 10 பேர் பிளஸ்-2 வகுப்பும், 6 பேர் 10-ம் வகுப்பும் படித்துள்ளனர். சிலர் கல்லூரி படிப்பும் படித்து வருகின்றனர். சிறைகளில் கைதிகளுக்கான உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இட்லி, சப்பாத்தி வழக்கமாக கொடுக்கிறோம். மாலை நேரத்தில் கொண்டக்கடலை, பாசிபயறு வழங்கப்படுகிறது. முன்பு வேர்க்கடலை மட்டும் வழங்கினோம். கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறைகளில் இருந்து நீதிமன்றங்கள் சென்று வரும் போது வேறு வழியில் கஞ்சாவை கைதிகள் கொண்டு வருகின்றனர். இதனை சோதனையின் போது கண்டுபிடித்து தடுக்கிறோம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்