அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .
இந்த நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 8, மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி ,கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.