அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-05-29 02:43 GMT

சென்னை,

தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் (திங்கட்கிழமை) விடைபெற உள்ளது. இதற்கு பிறகாவது வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வருகிற 31 மற்றும் 1-ந் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகா தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்