பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் சங்கிலி பறித்துச் சென்றார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி லட்சுமி (வயது 55). இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பு வழக்கம் போல் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் கிடந்த 16 கிராம் மதிப்புள்ள தங்க சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் பறித்து ஓடி விட்டார். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.