சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்-கலெக்டர் வழங்கினார்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ்

Update: 2023-08-16 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் காரைக்குடி உட்கோட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவின் போது போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் முன்னிலையில் கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார், வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பூரணசந்திரபாரதி, காரைக்குடி தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வேணுகோபால், சண்முகசுந்தரம் மற்றும் சாக்கோட்டை போலீஸ் ஏட்டு ஹில்டாமேரி, சோமநாதபுரம் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் தங்கராஜ், பள்ளத்தூர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் ராஜசுந்தரி ஆகியோர்களுக்கு கலெக்டர் ஆஷாஅஜீத் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்