மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்

மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2023-02-09 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் மாற்று திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்க 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முடித்து நிறைவு விழா நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுய தொழில் பயிற்சி நிறுவன இயக்குனர் முருகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சத்யநாராயணன், திறன் மேம்பாடு இயக்குனர் சாத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் முனைவோர்களாக சான்றிதழ் பெற்றவர்களை சாலைக்கிராமம் வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் ரத்தினம், வக்கீல் ஜான் சேவியர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாரிய உறுப்பினர் புஷ்பராஜ், வி.சி.க. ஒன்றிய செயலாளர் ஜேம்ஸ் வளவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிறைவாக சாலைக்கிராமம் மாற்றுத்திறனாளிகள் நல உறுப்பினர் குணா நன்றி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்