அனல்மின் நிலைய அதிகாரி உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு

அனல்மின் நிலைய அதிகாரி உள்பட 3 பேரிடம் செல்போனை பறித்து சென்றனர்.

Update: 2023-01-27 13:26 GMT

சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சமியுல்லா (வயது 49). இவர், வட சென்னை அனல் மின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார், இவர், நேற்று வேலை முடிந்து எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சமியுல்லா சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதேபோல் எர்ணாவூர் கன்னிலால் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (50). இவர், பெரம்பூர் ெரயில்வே லோகோவில் வேலை பார்த்து வருகிறார். இவர் எர்ணாவூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராஜேஷிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து வருகிறார். இவர், பேசின் பிரிட்ஜ் ெரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு வரும்போது மர்மநபர்கள் 3 பேர் கைகளால் தாக்கி செல்போன் மற்றும் ரூ.2,500 பணத்தை பறித்து சென்றனர்.

இதுதொடர்பாக எண்ணூர் மற்றும் பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த் (23), டில்லிபாபு (27) மற்றும் ரோகித் (21) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்