பயனாளிகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க செல்போன் மென்பொருள் உருவாக்கம் - சென்னை ஐ.ஐ.டி. தகவல்

பயனாளிகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க செல்போன் மென்பொருளை சென்னை ஐ.ஐ.டி. உருவாக்கி இருக்கிறது.

Update: 2023-01-20 00:56 GMT

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், இந்தியாவில் செல்போன் வைத்திருக்கும் 100 கோடி பயனாளிகள் பயன்பெறும் வகையில் செல்போனில் பயன்படுத்தக் கூடிய வகையிலான மென்பொருளை (சாப்ட்வேர்) உருவாக்கி இருக்கிறது.

"பார் ஓஎஸ்'' என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை செல்போன்களில் பதிவேற்றம் செய்ய முடியும். பயனாளிகள் ரகசிய தகவல் தொடர்புகள் தேவைப்படும் இடங்களில் முக்கிய தகவல்களை இதன் வாயிலாக பாதுகாப்பான சூழலில் பயனாளிகள் கையாளலாம். தனி உரிமை, பாதுகாப்புத் தேவைகளை கொண்ட நிறுவனங்களுக்கு தற்போது இந்த மென்பொருள் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பயனாளிகள் தனியார் 5ஜி நெட்வொர்க் மூலம் தனியார் கிளவுட் சேவைகளை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி கூறுகையில், 'நமது நாட்டில் பார் ஓஎஸ் மென்பொருளை ஏற்றுக்கொள்ளவும், பயன்பாட்டை அதிகரிக்கவும், மேலும் பல தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற சென்னை ஐ.ஐ.டி. ஆர்வம் கொண்டுள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்