சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது.

Update: 2023-02-24 18:30 GMT

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்தேர்வை 330 மாணவ-மாணவிகள் எழுதினர். இதேபோல் பிளஸ்-2 தேர்வையும் மாணவ-மாணவிகள் எழுதினர். தொடர்ந்து பாடவாரியாக தேர்வுகள் நடைபெறுகிறது. வருகிற 21-ந் தேதியுடன் எஸ்.எஸ்.எல்.சி.க்கு தேர்வுகள் நிறைவடைகிறது. வருகிற 23-ந் தேதியுடன் பிளஸ்-2 வகுப்புக்கு தேர்வுகள் முடிவடைகிறது. தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்