கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறப்பு
கபினி அணையின் நீர்வரத்து 13 ஆயிரத்து 114 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 146 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், நாளை மாலை அல்லது நாளை மறுநாள் அதிகாலை தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை எதிரொலியாக, கே.ஆர்.எஸ் அணைக்கான நீர்வரத்து 9 ஆயிரத்து 514 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கனஅடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர்வரத்து 13 ஆயிரத்து 114 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 146 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 800 கனஅடியாக உள்ளது.