வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு
வரத்து குறைவால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது.
நொய்யல், மரவாபாளையம், குளத்துபாளையம், குந்தாணி பாளையம், வேட்டமங்கலம், வடுகபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கை வாங்கி சவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி இருக்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒனறு ரூ.15ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.