அ.தி.மு.க.வினர் 600 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை அவுரி திடலில், நகர அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அனுமதியின்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிப்பாளையம் போலீசார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் உள்பட 250 பேர் மீது வழக்கு செய்துள்ளனர்.அதே போல் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க நகர செயலாளர் நமச்சிவாயம் உள்பட 350 பேர் மீது வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.