ரெயிலில் தள்ளி மாணவியை கொன்ற வழக்கு: சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை

சென்னையில் மின்சார ரெயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-17 10:56 GMT

சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட சதீசை 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஷ

இதையடுத்து டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் நேற்று சம்பவம் நடைபெற்ற சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்போது சிபிசிஐடி போலீசார் 2-வது நாள் விசாரணையை தொடங்கி உள்ளர். கொலை செய்யபட்ட மாணவி சத்திய பிரியாவின் தாய், தோழிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்