அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கூடாது என வழக்கு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடப்பட்டது.

Update: 2022-12-19 07:28 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அலகுமலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. 5-ம் ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது.

இந்த நிலையில் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று பஞ்சாயத்து தலைவர் தூயமணி சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தமிழ்நாடு அரசின் 2017 அரசாணைப்படி அலகுமலை, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடமாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான விண்ணப்பத்தை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க திருப்பூர் கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்