நீதிமன்றத்தில் குடிபோதையில் சத்தம் போட்ட 2 பேர் மீது வழக்கு

நீதிமன்றத்தில் குடிபோதையில் சத்தம் போட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-03-11 18:50 GMT

சிவகாசி, 

சிவகாசி அம்மன்கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சாந்தகுமார் என்கிற சாந்தா (வயது 29), சக்திவேல் (27). இவர்கள் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்தில் அமர்ந்து கொண்டு சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கோர்ட்டு அலுவலக உதவியாளர் மாரிக்கனி, கோர்ட்டு வளாகத்தில் சத்தம்போட்டு பேசக்கூடாது என்று கூறி உள்ளர், ஆனால் சாந்தகுமாரும், சக்திவேலும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து மாரிக்கனி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார், சாந்தகுமார், சக்திவேல் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்