விவசாயியை தாக்கியவர் மீது வழக்கு

விவசாயியை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-26 18:35 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(60). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன்(50). சம்பவத்தன்று அண்ணாதுரை தனது மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, அங்கு நின்று கொண்டிருந்த சாமிநாதனை ஓரமாக நிற்கும்படி, அண்ணாதுரை கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அண்ணாதுரையை சாமிநாதன் திட்டி, தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அண்ணாதுரை, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் அண்ணாதுரை அளித்த புகாரின்பேரில் சாமிநாதன் மீது சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்