திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு எதிராக வழக்கு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்து வரும் நிலையிலும், தூய்மையாக வைத்துள்ளதாக கோவில் நிர்வாகத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டியுள்ளது.

Update: 2023-11-17 02:27 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விபூதி மற்றும் தேங்காய் உடைக்கும் இடம் மாற்றப்பட்டதை எதிர்த்து, வீரபாகு மூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையிலும், முருகன் கோவிலை தூய்மையாக வைத்துள்ளதாகவும், அதற்கு கோவில் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பக்தர்களுக்கு விபூதி கொடுப்பதில் கோவில் நடைமுறைகள், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும், விபூதி கொடுக்கும் இடம், சன்னதியில் இருந்து சிறிது தூரம் தள்ளி கொடுத்தால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார். எந்த இடம் என்பதை மனுதாரர் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்ற நீதிபதி, விரிவான வாதத்திற்காக வரும் 24ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

Full View
Tags:    

மேலும் செய்திகள்