போக்குவரத்து விதிமீறிய 86 பேர் மீது வழக்கு

கோத்தகிரியில் போக்குவரத்து விதிமீறிய 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-08-05 22:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மலைப்பாதையில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் போக்குவரத்து விதிகளை மீறிய 51 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ.36 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் மேற்கொண்ட வாகன சோதனையில், விதிகளை மீறிய 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது. அவர்களுக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 86 பேருக்கு ரூ.64 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்