சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே ரூ.20 லட்சம் நில மோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

Update: 2023-01-21 18:45 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை பழனிவலசை கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவருடைய மனைவி மீனாட்சி (வயது 47). இவரின் கணவரான ரெத்தினசாமிக்கு அவரது தாய் கருப்பாயி அம்மாள் என்பவர் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு மற்றும் ஆர்.எஸ்.மடை பகுதிகளில் உள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான நிலத்தினை எழுதிக்கொடுத்துள்ளார். ரெத்தினசாமி தனது மனைவி பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளாராம்.

இந்நிலையில் மேற்கண்ட மனை நிலத்தை மீனாட்சியின் வயோதிகத்தை பயன்படுத்தி அவரை ஏமாற்றி மோசடியான இனாம் செட்டில்மென்ட் ஆவணத்தை உருவாக்கி அபகரிப்பு செய்துவிட்டார்களாம். இதுகுறித்து அறிந்த மீனாட்சி பழனிவலசை கிராமத்தை சேர்ந்த தங்கசாமி மகன்கள் சரவணமுத்து, துரைசிங்கம், பத்திரஎழுத்தர் ராமநாதபுரம் ராஜசேகரன், திருப்பாலைக்குடி முகம்மது பைசல், ராமநாதபுரம் பாரதிநகர் அயூப்கான் மகன் அஸ்கர்அலி, ராமநாதபுரம் 2-ம் நிலை சார்பதிவாளர் சுதாகர் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க நிலமோசடி சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின்படி ராமநாதபுரம் நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags:    

மேலும் செய்திகள்