விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள புருஷானூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 75), விவசாயி. இவரது தம்பி பச்சமுத்து (70), சண்முகம், தனக்குரிய ஒரு ஏக்கர் நிலத்தை அதே கிராமத்தை சேர்ந்த விஜயா என்பவருக்கு விற்றுவிட்டார். இதனால் பச்சமுத்து, அவரது மகன்கள் பழனிவேலு (35), ராமஜெயம் (30) ஆகியோர், சண்முகத்திடம் சென்று நீங்கள் எப்படி வேறொருவருக்கு நிலத்தை விற்பனை செய்யலாம் என்று கேட்டு பிரச்சினை செய்து அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் பச்சமுத்து உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.