வீட்டை சேதப்படுத்திய 18 பேர் மீது வழக்கு

வீட்டை சேதப்படுத்திய 18 பேர் மீது வழக்கு

Update: 2023-04-28 20:14 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள காடஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 44). இவருக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வெள்ளிச்சந்தையை சேர்ந்த சுனில், மிக்கேல், காப்புக்காடு பகுதியை சேர்ந்த பாபு, லதா, பேபி, சிந்து, சினி உள்பட 18 பேர் சேர்ந்து கும்பலாக சென்று பயங்கர ஆயுதங்களுடன் ஜெயந்தியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும், வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் சுனில் உள்பட 18 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்