விதிமீறிய பதிவு எண்ணுடன் வலம் வந்த 1670 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

விதிமீறிய பதிவு எண்ணுடன் வலம் வந்த 1670 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2023-02-09 21:12 GMT


மதுரை நகரில் விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளர். அதன்படி வாகன பதிவு எண் பலகைகளில் எண்கள் தெரியாமல் இருப்பது போன்றும், அதில் படங்கள் வரைந்தும், எண்களை விதிமுறைகளை படி எழுதாமல் இருப்பது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 வாரங்களில் இவ்வாறு விதி மீறிய வாகன பதிவெண் பலகைகளுடன் வலம் வந்ததாக 1670 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 550-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் போலீசார் அவ்வாறு விதிமீறிய வாகன பதிவு எண் பலகையை அகற்றி, அதனை உடனே சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இந்த பணியில் போக்குவரத்து உதவி கமிஷனர்கள் செல்வின், மாரியப்பன் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் ஈடுப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்