அரூர்:
அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி போலீசார், சிட்லிங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தின் அடியில் சிலர் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கோட்டப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 43), தமிழ்மணி, அஜித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.