பள்ளி மாணவி கேலி, கிண்டல்தந்தை-மகன் மீது வழக்கு

Update: 2023-09-02 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே 14 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியை தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த நடராஜ் மகன் விஜயகாந்த் (வயது27) என்பவர் தினமும் கேலி, கிண்டல் செய்துள்ளார். மாணவியின் தந்தை இது குறித்து கேட்டதற்கு விஜயகாந்த் மற்றும் அவரது தந்தை நடராஜ் ஆகியோா தகாத வார்தைகளால் பேசி உள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தை பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தந்தை-மகன் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்