நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜருகு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 38). சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜருகு சந்திப்பு சாலை பகுதியில் ராஜசேகர் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் மூட்டுக்கல் அமைத்து இரும்புவேல் போட சென்றனர். அப்போது அங்கு வந்த 8 பேர் ராஜசேகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தொப்பூர் போலீசார் சலூன் கடைக்காரரை தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி (42) உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி தான் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஜருகு பகுதியை சேர்ந்த ராஜசேகர், நாகராஜன் (64) உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.