அரசு பஸ் மோதி சரக்கு ஆட்டோ டிரைவர் சாவு

நன்னிலத்தில் அரசு பஸ் மோதி சரக்கு ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2022-12-22 18:45 GMT

நன்னிலம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 35). சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவில் நிலக்கடலைகளை ஏற்றி கொண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற்கு வந்தார். பின்னர் ஒரு கடையில் நிலக்கடலை மூட்டைகளை இறக்கி விட்டு, அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நன்னிலத்தில் இருந்து வேலூர் சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவசங்கரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசங்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் அரசு பஸ் டிரைவர் சரவணன் (51) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்