சரக்கு வாகனங்கள் மீது கார் மோதல்

வந்தவாசி அருகே சரக்கு வாகனங்கள் மீது கார் மோதியதில் புதுச்சேரிைய சேர்ந்த பெண் டாக்டர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-27 16:51 GMT

வந்தவாசி அருகே சரக்கு வாகனங்கள் மீது கார் மோதியதில் புதுச்சேரிைய சேர்ந்த பெண் டாக்டர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சரக்கு வாகனங்கள் மீது கார் மோதல்

புதுச்சேரி பூர்ணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிபாஸ்கர் (வயது 45). இவர், தனது குடும்பத்துடன் காரில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வழியாக காஞ்சீபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் தாழம்பள்ளம் கூட்டுச்சாலை அருகே செல்லும் போது திடீரென எதிரே வந்த சரக்கு வாகனம் மீது கார் மோதியது.

தொடர்ந்து பால் ஏற்றி வந்த மற்றொரு மினிசரக்கு வாகனம் மீதும் கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஜோதிபாஸ்கர், அவரது மனைவி டாக்டர் வாசுகி (42), மகள்கள் அக்சயா (11), கஷனா (10) ஆகிய 4 பேரும், துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மினிசரக்கு வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த வழூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி (40), சந்தோஷ் (20), கிஷ்டம்மாள் (60), ஜெகதா (54), ஜெயராமன் (45), எட்டியம்மாள் (75) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்