கொட்டாரம் அருகே சைக்கிள் மீது கார் மோதல்; பத்திர எழுத்தர் பலி

கொட்டாரம் அருகே சைக்கிள் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் பத்திர எழுத்தர் பலியானார்.

Update: 2022-09-29 18:50 GMT

கன்னியாகுமரி, 

கொட்டாரம் அருகே சைக்கிள் மீது கார் மோதிக் கொண்ட விபத்தில் பத்திர எழுத்தர் பலியானார்.

விபத்தில் பலி

கொட்டாரம் அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 54). இவர் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் ஒரு பத்திரம் எழுதும் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சைக்கிளில் பெரியவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வேகமாக வந்த ஒரு கார் முரளி மீது மோதியது. இதில், முரளி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே முரளி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான நாகர்கோவில் பள்ளிவிளையை சேர்ந்த ஜெகன்(39) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் மோதி பத்திர எழுத்தர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்