திருச்சி அருகே கோர விபத்து: அரசு பஸ் மீது மோதிய கார் - 5 பேர் பலி
திருச்சி மணப்பாறை அருகே அரசு பஸ்சும், காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி,
திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் இன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 25க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பஸ் மோதியது. இந்த மோதலை தவிர்க்க முயற்சித்தபோது அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் கார் நசுங்கியது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்லனர்.
தகவலறிந்து சமப்வ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.