கஞ்சா விற்றவர் கைது

நாசரேத் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-20 14:47 GMT

நாசரேத்:

நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாசரேத் அருகே உள்ள தன்டையார்விளை பஸ்நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தன்டையார்விளை சாலமோன் மகன் பீட்டர் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 12 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்