புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-11-25 18:48 GMT

தென்காசி கேன்சர் சென்டர் ஆஸ்பத்திரி, இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ்., குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து தென்காசியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தின. நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரப் பணி துணை இயக்குனர் முரளி சங்கர் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், ரோட்டரி சங்க தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு தொடங்கி நான்கு ரத வீதிகளில் சுற்றி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கேன்சர் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.

நிகழ்ச்சியில் குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்க செயலாளர் சந்திரதாஸ், முன்னாள் ரோட்டரி சங்க உதவி கவர்னர் முருகன் ராஜ், முன்னாள் தலைவர் வெங்கடேஸ்வரன், முத்துக்குமார், ஜெயச்சந்திரன், தொழிலதிபர் மாரிமுத்து, சரவணன், கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குனர் பாரதிராஜா, நல்லாசிரியர் சுரேஷ்குமார், ஆசிரியர் செந்தில் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்