அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது தடுக்கப்படுமா?

வெம்பக்கோட்டை பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-10-13 19:37 GMT

வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து ஏழாயிரம் பண்ணை சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யது இப்ராகிம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் விளாமரத்துப்பட்டி, சங்கரபாண்டியாபுரம், மஞ்சள் ஓடைப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் ேபாலீசார் சோதனை செய்தனர்.அப்போது சங்கரபாண்டியாபுரம் காட்டுப்பகுதியில் தகர செட் அமைத்து பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த இ.மீனாட்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 25), விளமரத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புராஜ் (51) ஆகியோரிடம் இருந்து தடை செய்யப்பட்ட சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து 3 பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். வெம்பக்கோட்டை பகுதிகளில் அனுமதியின்றி வீடுகளிலும், காட்டுப்பகுதிகளிலும் பட்டாசு தயாரிப்பதை போலீசார் தடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், அவ்வாறு தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்