சேதமடைந்த குளத்தின் படித்துறை சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த குளத்தின் படித்துறை சீரமைக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பாா்த்து உள்ளனர்.

Update: 2023-03-03 18:45 GMT

 கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த குளத்தின் படித்துறை சீரமைக்கப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பாா்த்து உள்ளனர்.

பெருமாள் குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, பாரதிமூலங்குடியில் பெருமாள் குளம் உள்ளது. இக்குளத்தை பாரதிமூலங்குடி, வெங்காரம்பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும், இக்குளத்தின் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தின் கரையோரத்தில் கட்டப்பட்ட படித்துறை சேதமடைந்து காணப்படுகிறது. படிக்கட்டுகள் மற்றும் தடுப்பு சுவர்கள் உடைந்தும், படித்துறை முழுவதும் குப்பைகள் மற்றும் உடைந்த பாட்டில்கள் சிதறிக் கிடக்கிறது.

சீரமைக்க கோாிக்கை

குறிப்பாக இரவு நேரத்தில் சமூக விரோதி களின் கூடாரமாகவும் இந்த சேதமடைந்த படித்துறை மாறி விட்டது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக படித்துறையை பயன்படுத்த முடியாத நிலையில் கிராம மக்கள் உள்ளனர். மேலும் குளத்தில் இறங்கி குளிக்கவோ ஆடைகள் துவைக்கவோ முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த படித்துறையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்