கிருஷ்ணகிரியில்அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

Update: 2022-12-29 18:45 GMT

தமிழக அரசு போக்குவரத்து பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தர்மபுரி மண்டலத்திற்குட்பட்ட 15 பணிமனைகளில் உள்ள டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி நகர போக்குவரத்து கழக பணிமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மண்டல பொதுமேலாளர் ஜீவரத்தினம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். பயிற்சி மருத்துவ அலுவலர் விமல், டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர், பணியாளர்களுக்கு, ரத்த அழுத்தம், சிறுநீரகம், கண், மூக்கு, தொண்டை உள்பட, 12 வகையான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதில், தர்மபுரி மண்டலத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் 750 பேர் பயனடைவார்கள். இந்த முகாமில், 250 பணியாளர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர போக்குவரத்து கழக கிளை மேலாளர் பார்த்திபன், போக்குவரத்து மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, தொழிற்சங்க நிர்வாகிகள் ரவி, சிவகுமார், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்