வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,880 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற்றது. பெத்ததாளப்பள்ளியில் நடந்த பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,880 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. பெத்ததாளப்பள்ளியில் நடந்த பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
வாக்காளர் பட்டியல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,880 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது. பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி, கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சுருக்க திருத்த பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் டிசம்பர் 8-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இன்று சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தல் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1,880 வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. வாக்காளர் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். குறிப்பாக இளம் வாக்காளர்கள் (இன்று) நடைபெறும் சிறப்பு முகாம்களில் உரிய படிவங்களை பூர்த்தி செய்து, தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்நாதன், கங்கலேரி கிராம நிர்வாக அலுவலர் சீதா மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உடனிருந்தனர்.