தங்காடிகுப்பம் ஊராட்சியில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

தங்காடிகுப்பம் ஊராட்சியில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

Update: 2022-09-10 18:23 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதன்படி கிருஷ்ணகிரி தாலுகாவில் தங்காடிகுப்பம் கிராமத்தில் நடந்த பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொலைபேசி எண், முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்ட பொறியாளர் சரவணன், விற்பனையாளர்கள் சரவணன், வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்