முகாம்

கும்பகோணத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-10-02 20:09 GMT

கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்டவை காரணமாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் கும்பகோணத்தில் 3 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் காய்ச்சல் அறிகுறி உள்ள நோயாளிகள் உரிய சிகிச்சைக்காக கும்பகோணம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். தொடர்ந்து இது போன்ற பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்