மின்நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்

Update: 2023-07-28 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மாதந்தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. வருகிற 4-ந் தேதி போச்சம்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 8-ந் தேதி கிருஷ்ணகிரி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22-ந் தேதி ஓசூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் தங்களின் குறைகளை மேற்கண்ட நாட்களில் தங்கள் மின் இணைப்பு சம்பந்தப்பட்ட கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கலந்து கொண்டு, குறைகளை தெரிவித்து தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்