ஸ்டூடியோவில் கேமரா திருட்டு

ஸ்டூடியோவில் கேமரா திருட்டு போனது.

Update: 2023-04-19 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சுந்தரம் (வயது 40). இவர் பாடாலூர் மெயின் ரோட்டில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு திறக்கப்பட்டு கடையில் இருந்த ஒரு கேமரா, கம்ப்யூட்டர் மானிட்டர் 2, ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்