வந்தே பாரத் ரெயில் மோதி கன்றுக்குட்டி இறந்தது

வந்தே பாரத் ரெயில் மோதி கன்றுக்குட்டி இறந்தது

Update: 2022-11-18 18:14 GMT

அரக்கோணம்

வந்தே பாரத் ரெயில் மோதி கன்றுக்குட்டி இறந்தது

தென் மாநிலங்களுக்கான முதல் வந்தே பாரத் ரெயில் மைசூரு - சென்னை இடையே கடந்த 12-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், மைசூருவில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் மாலை வந்தே பாரத் ரெயில் சென்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென கன்றுக்குட்டி மீது ரெயில் மோதியது. இதில் கன்றுக்குட்டி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதன் காரணமாக வந்தே பாரத் ரெயில் சிறிது நேரம் வழியிலேயே நின்று பின்னர், மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்த விபத்தால் ரெயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

ஏற்கனவே குஜராத் மாநிலம் காந்தி நகர் - மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் ரெயில் கால்நடைகள் மீது மோதிய விபத்தில் ரெயிலின் முன்பக்கம் பகுதி பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்