கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கோரிக்கை விளக்க கூட்டம்

திருப்பத்தூரில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-12 17:32 GMT

திருப்பத்தூர் மாவட்ட தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கோரிக்கை விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே.சுரேஷ் தலைமை தாங்கி கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் கேபிள் டி.வி. நிலுவைத் தொகை என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையை பயன்படுத்தி ஆபரேட்டர்களை குற்றவாளிகளை போல் கையாளுவதை நிறுத்த வேண்டும். அரசு கேபிள் டி.வி. நிறுவனம், ஆபரேட்டர்களுக்கு தடையற்ற சிக்னல்களும், உபகரணங்களும் வழங்காமல் ஆபரேட்டர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள நிலவைத் தொகையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நல வாரியம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்