கட்சி வித்தியாசத்தை மறந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும்; முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேச்சு

கட்சி வித்தியாசத்தை மறந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.

Update: 2023-02-24 21:23 GMT

கட்சி வித்தியாசத்தை மறந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.

விமர்சகர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் நேற்று ஈரோடு திருநகர் காலனி கண்ணையன் வீதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தனுஷ்கோடி ஆதித்தன் பேசும்போது கூறியதாவது:-

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் மத்திய மந்திரியாகவும், முன்னாள் எம்.பி. -எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றி உள்ளார். அரசியலில் மிகப்பெரிய விமர்சகராக இருந்து வருகிறார்.

கட்சி வித்தியாசத்தை மறந்து...

அவர் வெற்றிபெற்றால் இந்த தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய பணிகளை செய்வார். எனவே நீங்கள் அனைவரும் அவருக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும். அவருக்கு நீங்கள் வெற்றியை தேடித்தரவேண்டும். இந்த தொகுதியில் பல்வேறு நல்ல பணிகளை ஆற்ற உள்ளார். நீங்கள் அனைவரும் கட்சி வித்தியாசத்தை மறந்து அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின் பென்னி பெப்சி, வக்கீல் பிரிவு மாநில நிர்வாகி சையது ஆரூன், வரலட்சுமி எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் கார்த்தி, ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் செந்தூர் ராஜகோபால், மாநில பொதுச்செயலாளர்கள் சரவணன், சிந்துஜா, மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், என்.சி.டபுள்யூ.சி. மாவட்ட தலைவர் கிருஷ்ணவேணி, என்.ஐ.டி.யு.சி. மண்டல தலைவர் ரவி, செஞ்சி ஒன்றிய பிரசாரக்குழு தலைவர் காசிநாதன், ஊடகபிரிவு தலைவர் அர்சத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்