எம்.ஜி.ஆருடன் அவருடைய கொள்கையும் செத்து விட்டதா?;- தி.மு.க வர்த்தக அணி செயலாளர் கேள்வி

எம்.ஜி.ஆருடன் அவருடைய கொள்கையும் செத்து விட்டதா?- தி.மு.க வர்த்தக அணி செயலாளர் கேள்வி

Update: 2023-02-21 22:44 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசித்து மாணிக்கம், ஈரோடு பி.பி.அக்ரஹாரம், வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து கை சின்னத்துக்கு தீவிரமாக வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் பேசும்போது கூறியதாவது:-

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் திடீரென இறந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணி தர்மப்படி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, இந்த முறை அ.தி.மு.க. போட்டியிடுகிறது. எனவே அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரின் கொள்கை செத்து விட்டதா? அல்லது எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. இப்போது இல்லையா? என்று தெரியவில்லை. நீங்கள் அனைவரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை பெரு வாரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் வர்த்தக அணி துணைச்செயலாளர்கள் ஐ.கென்னடி, தர்மபுரி சத்தியமூர்த்தி, வட்ட செயலாளர்கள் செந்தில், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்