ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்; அமைச்சர்கள் சு.முத்துசாமி, எ.வ.வேலு ஆலோசனை

ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் குறித்த தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, எ.வ.வேலு ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

Update: 2023-02-03 21:58 GMT

ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் குறித்த தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, எ.வ.வேலு ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

ஆலோசனை கூட்டம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சியில் பெரியசேமூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கை சின்னம்

கூட்டத்தில், தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்களை வீடு, வீடாக சென்று சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரிக்க வேண்டும். பொதுமக்களிடம் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சிறந்த திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும் உள்ளிட்ட பிரசாரம் தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைத்தலைவா் செந்தில்குமார், இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் பிரகாஷ், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்