சென்னை மெரினாவில் கரை ஒதுங்கிய மிதவைக் கூண்டு

கடல் சீற்றத்தால் கடலில் போடப்பட்டிருந்த மிதவைக் கூண்டு கரை ஒதுங்கி உள்ளது.

Update: 2024-11-27 07:53 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் அதிகரித்துள்ளது. வடக்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இந்தநிலையில், சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் மிதவைக் கூண்டு கரை ஒதுங்கியது. கடல் சீற்றத்தால் கடலில் போடப்பட்டிருந்த மிதவைக் கூண்டு கரை ஒதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போது செயல்பாட்டில் இருப்பதா அல்லது பழுதடைந்ததா என கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பொது மக்கள் ஆபத்தான முறையில் அதன் மேல் ஏறி புகைப்படம் எடுத்து வருவதால், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மிதவைக் கூண்டு குறித்து மெரினா கடற்கரை போலீசார், இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல் சென்னை - பரங்கிப்பேட்டை இடையே கரையைக் கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். நவம்பர் 30ம் தேதி புயல் கரையைக் கடக்கும் என்பதால் வரும் வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சென்னையில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்