மானிய விலையில் துவரை விதை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் துவரை விதை வாங்கி விதை்து பயன்பெறலாம் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-27 15:39 GMT

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் துவரை விதை வாங்கி விதை்து பயன்பெறலாம் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

துவரை

விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கொடுக்கும் வேளாண் பயிர்களில் முக்கிய பயிராக துவரை பயிர் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் துவரை பயிரானது ஆண்டிற்கு சுமார் 2000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறைந்த நீர் தேவை கொண்ட இப்பயிரானது மணிலா மற்றும் உளுந்து போன்ற பயிர்களில் ஊடுபயிராக பயிரிடப்படுவதுடன், தனியாகவும் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை குறைந்த கால, மத்திய கால மற்றும் நீண்ட கால ரகங்களாக துவரை பயிரிடப்படுகிறது. நவீன தொழில்நுட்பமான நடவு முறையில் துவரை சாகுபடி செய்வதன் மூலம் சாதாரண முறையில் கிடைக்கும் மகசூலான எக்டருக்கு 1,200 கிலோவை விட ஆயிரம் கிலோ அதிகமாக அதாவது 2 ஆயிரத்து 200 கிலோ வரைமகசூல் கிடைக்கிறது.

மானிய விலை

நடவு முறை துவரை சாகுபடியில் எக்டர் ஒன்றுக்கு 2½ கிலோ விதம் விதை போதுமானது. தற்போது அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் எல்.ஆர்.ஜி -52 என்ற 160 - 170 நாட்கள் வயதுடைய ரகம் இருப்பு உள்ளது. இந்த துவரை விதையானது தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாநிலத் திட்டங்களின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே மணிலா விதைப்பு நடைபெறும் இப்பருவத்தில் ஊடுபயிராகவோ அல்லது தனிப் பயிராகவோ பயிரிட இவ்விதையினை வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம் என திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்