ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெரும்பாலான பொதுமக்கள் மதியம் வீட்டில் அசைவ உணவை சமைத்து சாப்பிட்டனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் மது விற்பனையும் படுஜோராக நடந்தது.