தமிழகத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி
தமிழகத்தில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம் எனவும் உத்தரவு அமலுக்கு வந்ததில் இருந்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் கொண்டு வரப்பட்ட நடைமுறை, ஜூன் 5 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.