பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை

தாந்தோணிமலையில் பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-07 18:03 GMT

பஸ் கண்டக்டர்

கரூர் தாந்தோணிமலை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சுபாவிக்னேஷ் (வயது 27). இவர் தனியார் பஸ் நிறுவன ஒன்றில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுபாவிக்‌னேஷ் மனமுடைந்து காணப்பட்டார்.இந்தநிலையில் சுபாவிக்னேஷ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டனர்.

சாவு

பின்னர் அவரை சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுபாவிக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்