வாகன உதிரிபாகங்கள், குப்பைகளுக்கு தீ வைப்பு
வேலூர் சேண்பாக்கத்தில் வாகன உதிரிபாகங்கள், குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அருகே சென்னை-பெங்களூரு அணுகுசாலையோரம் ஏராளமான இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் உள்ளன.
இங்கு சேகரமாகும் தேவையற்ற மற்றும் பழைய வாகன உதிரிபாகங்கள், சீட்கவர்கள், டயர்கள் மற்றும் குப்பைகள் சாலையோரம் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அருகே வாகன உதிரிபாகங்கள், குப்பைகளை மர்மநபர்கள் இன்று தீ வைத்து எரித்தனர்.
சிறிதுநேரம் பற்றி எரிந்த தீயினால் கரும்புகை வெளியேறியது.
அதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
இதுபோன்று சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.